'லாஇலாஹ இல்லல்லாஹ்'
கலிமாவின் சிறப்பு
லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவருக்கு இக்கலிமா என்றேனும் ஒரு நாள் நிச்சயம் பலன் அளிக்கும் (ஈடேற்றமளிக்கும்) அதற்கு முன் அவர் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை அனுபவிக்க நேர்ந்தாலும் சரியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (தபரானீ)
நான் ஒரு கலிமாவை அறிவேன். ஒருவர் தன் மரண வேளையில் அக்கலிமாவைக் கூறினால் அவரது உயிர் உடலை விட்டுப் பிரியும் போது இக்கலிமாவின் பரக்கத்தால் ரூஹ் (உயிர்) நிம்மதி பெறும். மேலும் கியாமத் நாளில் அக்கலிமா அவருக்கு ஒளியாகிவிடும். (அதுதான் லாஇலாஹ இல்லல்லாஹு என்னும் கலிமாவாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் தல்ஹதுப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (மஜ்மஉஸ், ஸவாயித்)
லாஇலாஹ இல்லல்லாஹு என்னும் கலிமாவைச்சொல்லி ஒருவர் அவரது இதயத்தில் ஒரு தொலிக் கோதுமை அளவு நன்மை (ஈமான்), அல்லது மணிக் கோதுமை அளவு, அல்லது அணு அளவு ஈமான் இருந்தாலும் அவரும் நரகிலிருந்து வெளியேறிவிடுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி)
பூமியிலுள்ள நகரங்கள், கிராமங்கள், பாலைவனங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கூடாரத்திலும் இஸ்லாத்தின் இந்தக் கலிமாவை அல்லாஹுதஆலா நுழையவைத்தே தீருவான்.
இதை ஏற்றுக் கொள்பவர்களை அல்லாஹுத்தஆலா கலிமா உடையவர்களாக்கி கண்ணியமளிப்பான். ஏற்காதவர்களை இழிவுபடுத்துவான். பிறகு அவர்கள் முஸ்லிம்களுக்கு கட்ப்பட்டு வாழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மிக்தாதிப்னு அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேலும் யார் என்னைப் பார்த்து என் மீது ஈமான் கொண்டாரோ அவருக்கு ஒருமுறை சுபச் செய்தி உண்டாவதாக! யார் என்னைப் பார்க்காமல் என் மீது ஈமான் கொண்டாரோ அவருக்கு ஏழு (பல) முறை சுபச் செய்தி உண்டாவதாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹமத்)
நீங்கள் அல்லாஹ்வின் மீது முறையாக (தவக்குல்) பாரஞ்சாட்டுவீர்களாயின் அல்லாஹ் பறவைகளுடைய (ரிஸ்க்) தேவையை நிறைவேற்றுவது போல் உங்களுடைய தேவையை நிறைவேற்றுவான். அப்பறவைகள் அதிகாலையில் பசித்த நிலையில் வெளியேறுகின்றன. மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அறிவிக்கின்றார்கள் (திர்மிதி)
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் நான் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் எவர் சாட்சி சொல்லி மேலும் அவரது நாவு இந்தக் கலிமா (தய்யிபா)வை அதிகமாகச் சொல்லி மனம் லயித்த இந்தக் கலிமாவால் எவர் உள்ளம் நிம்மதி அடைகிறதோ அத்தகையவரை நரக நெருப்புத் தீண்டாது எஎன்றும் எவர் இக்கலிமாவை உறுதியான உள்ளத்துடன் சாட்சி சொல்லில் நிலையில் மரணமடைகிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத், பைஹகி)
Labels : wallpapers Mobile Games car body design free investmentsystems
0 comments:
Post a Comment