அல்லாஹ்வின் பாதையில் தருமம் செய்யுங்கள்
ஒரு முஸ்லிமின் வாழ்வு இறைவனின் பொருத்தத் தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றையே இலட் சியமாகக் கொண்டதாகும். இதனால் தான் ஒவ்வொரு முஸ்லிமினதும் எண்ணம், நடத்தை, சொல், செயல் யாவும் இறைவனின் கட்டளைப்படி அமைய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி யுள்ளார்கள்.
இறை திருப்தியை நாடி செலவழிக்கப்படும் செலவுகள் எவ் வாறு அமைய வேண்டும் என்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா வரம்புகளை ஏற்பத்தித் தந்துள்ளான்.
“இறைவழியில் செலவு செய்தல்” பற்றி திருக்குர்ஆனின் 2வது அத்தி யாயமான சூரா பகராவின் 261-265 ஆம் வசனங்களில் பின்வருமாறு கூறப்படுகின்றது. “அல்லாஹ்வின் வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம் ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும்.
அதிலி ருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. (இவ்வாறு) அல்லாஹ் தான் நாடுவோருக்கு (அவர்களது நற்செயல்களின் பலன் களை) பன்மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹ் அதிகமதிகம் வழங்குபவனும் யாவற்றை நன்கு அறிந்தவனுமாக இருக்கின்றான்.”
இறைவன் கட்டளையை ஏற்று அவனுக்குப் பணிந்து தருமம் செய் யப்படும் போது தான் செய்யும் பிரதியுபகாரத்தை மிகச் சிறப்பான உவமை ஒன்றின் வாயிலாக யாருக் கும் விளங்கக் கூடிய எளிய நடை யிலே அல்லாஹ் எடுத்துக் காட்டி யுள்ளான்.
தானிய விதை முளைத்து கதிர்கள் தோன்றி அதிலே பல்லாயி ரம் தானிய மணிகள் உற்பத்தியாவது போல உனது செலவுக்குரிய கூலி யைப் பன்மடங்காக்கித் தருவேன் என்று இறைவன் திருமறையில் கூறி யுள்ளதைவிட எது தான் ஒரு இறை நேசனுக்குப் பெரிதாக முடியும்? வேறு ‘எது பற்றித்தான் அச்சம் ஏற்பட முடியும்? இறைவழியில் செலவிடுவது பற்றி கூறும் இதே வசனத்தில் ‘தான் நாடியோருக்குக் கூலி வழங்கு’வதாகச் சொல்லப்படும்.
அச்சொற்றொடர் இடம்பெறுவது பற்றியும் அவதானிப் போம். நாம் இஸ்லாம் கூறியுள்ளமை யால் தான் ஏழைகளுக்காக உதவு கின்றோம். இறைவனுக்காகவே செல வழிக்கிறோம். என்று நினைத்துக் கொண்டிருந்தபோதும் அல்லாஹுத்த ஆலா கூறியுள்ளவாறு அவன் நாடி யவர்களது பட்டியலில் இடம்பெற வேண்டுமே! சில வேளை அவ்வாறு இடம் பெற முடியாத சந்தர்ப்பங்கள் உருவாகக்கூடுமா? என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன; தோன்றுவது இயற்கை.
இப்படியாக ஒரு சந்தேகத்தை உருவாக வைத்த அச்சந்தேகத்துக்கு விடை தரும் வகையில் இதே வசனத் தொடரில் (2:261-265) தொடர்ந்துவரும் இறைவசனங்கள் விளக்கம் தருகின்றன.
“எவர்கள் அல்லாஹ்வுடைய வழி யில் செலவு செய்த பின்னர் அதைத் தொடர்ந்து தாங்கள் செலவு செய்த தைச் சுட்டிக்காட்டிப் பேசாமலும் (மனம்) புண்படச் செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு உரிய நற்கூலி அவர்களின் அதிபதி யிடம் இருக்கின்றது. மேலும் அவர் களுக்கு எதுவித அச்சமுமில்லை; துயரப்படவுமாட்டார்கள்”.
இதேவேளை ஒருவரது மனதை நோவித்துவிட்டு அள்ளிக் கொடுக்கும் தருமம் கூட இறைவனிடம் செல்லு படியாகாது. அதேவேளை எதையும் வழங்கச் சக்தியற்ற போது அன்பாகப் பேசி திருப்பி அனுப்பும் போது கூட அந்த உறவு தருமமாகிறது. நற்கூலி பெறத் தகுதியாகிறது என்று கூறி எமது நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பதையே இவ் வசனங் கள் கூறுகின்றன.
இவற்றிலிருந்து விளங்குவது என்னவெனில் இறைவன் நாடியவர்களது பட்டியலில் இடம்பெற நமது நடத்தையும், நடத்தையை உரு வாக்கும் மனப்பாங்கும் இறைவழி காட்டற்படி அமைய வேண்டும் என்பதே. செல்வத்தின் அளவோ தருமத்தின் அளவோ அல்ல; இறை வனிடம் போய்ச் சேருவது, அது சொற்ப அளவிலாயிருந்தாலென்ன; சொல் அளவிலாயிருந்தாலென்ன, இறைவன் விரும்பும் நடத்தைகளோடு கூடிய தருமமே ஆகும் என்பதை நாம் சிந்தித்து விளங்கிக் கொள்ள வேண்டும். அத்தோடு முற்றுப்பெற வில்லை; இறைவழியில் தருமம் செய் வோர் தகைமையைக் கூட்டிக்கொள்ள இன்னும் விளக்கம் தருகிறான்.
அதே வசனத் தொடரின் (2:261-265) “இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் ஈமான் கொள்ளாமல், மனிதர் களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளைச் செய்பவனைப் போல் நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும் (மனம்) புண்படச் செய்தும் உங்களுடைய தான தர்மங்களைப் பாழாக்கி விடா தீர்கள்.
அவன் (செய்யும் செயலுக்கு) உவமை மண்மூடிய ஒரு வழுக்குப் பாதையைப் போன்றதாகும். அதன் மீது பெருமழை பெய்து (அதை மூடியிருந்த மண்ணை அடித்துக் கொண்டு போய்) அதை வெறும் பாதையாக்கி விட்டது. இத்தகையவர்கள் செய்யும் தானதர்மங்களால் எதையும் (எந்த நன்மையும்) ஈட்ட முடியாது.
என்ற வசனங்களிலே உலக செல் வாக்கைப் பெறும் நோக்கில் தருமம் செய்பவர்களை எடுத்துக்காட்டி, அவர் களுடன் ஒப்பிட்டு விளக்கி மீண்டும் மனத்தைப் புண்படுத்துவதையும், சொல்லிக் காட்டுவதையும் ஞாபகமூட்டி இறை மறுப்பாளர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள். அவ்வாறு நடந்து கொள்வீர்களானால் நீங்கள் செய்த தருமம் பாழாகி விடும் என்று கூறி நிச்சயமாக அது இறைவனை அடையவே அடையாது என அழுத் தந்திருத்தமாக யாருக்கும் விளங்கும் வகையில் எடுத்துக் காட்டுகிறான்.
Labels : wallpapers Mobile Games car body design free investmentsystems
0 comments:
Post a Comment